Saturday, January 23, 2010

மிகவும் சாமார்த்தியமான சுருட்டல்(திருட்டு). ஆனால் அதிர்ஷ்டம்தான் இல்லை


          ஒரு நாள் நானும் எனது நண்பரும் ஒரு மளிகை கடைக்கு போயிருந்தோம் அப்பொழுதுதான் கடைக்காரர் ஒரு மாம்பழம் சாப்பிட்டு முடித்திருந்தார். அவர் சாப்பிட்டு முடித்த மாம்பழத்தின் கொட்டையை ஒரு பேப்பரில் வைத்து மடித்து (அப்படியே போட்டால்  அசிங்கமாக தெரியுமே என்று நினைத்து!) கடைக்கு வெளியே ஒராமாக போட்டு கையை கழுவினார். அதாவது ரோட்டின் ஓரமாக போட்டார் அப்படி போட்டால் மறுநாள் ரோட்டை பெறுக்குபவர்கள் அக்குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடுவார்கள் ( இது சென்னையில் மற்ற ஊரில் எப்படியோ)

 ஒரு பெண்மணி(சுமார் 30 வயது இருக்கும்) கடைக்கு வந்தார்கள் சரக்கு வாங்கினார்கள் அதை கையில் வைத்திருந்த கூடையில் போட்டு வீட்டுக்கு போனார்கள்  போகும்போது கடைக்காரர் ரோட்டோரமாக போட்டிருந்த அந்த பொட்டலதை பார்த்தார்கள். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தார்கள் (தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்து!) உடனே அதை காலால் உதைத்து  சிறிது து)ரம் தள்ளிவிட்டார்கள். இப்படியே தொடர்ச்சியாக காலால் எத்தியே ஒரு 30அடி து)ரம் வரை தள்ளிவிட்டார்கள். அப்புறம் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு! அந்த பொட்டலத்தை எடுத்து தனது கூடையில் போட்டு வீட்டுக்கு சென்றார்கள்.  இதை  எப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. எங்களுக்கு. உங்களுக்கு?