Saturday, January 16, 2010

என் மனதை பரவசமாக்கும் ஆயிரத்தில் ஒருவன்

தமிழில் இது போன்ற படம் இதுவரை வந்ததில்லை. இது ஒரு புதுமையான படைப்பு

          சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நடந்த போரில் பாண்டியர்களிடமிருந்து சிலை ஒன்றை சோழர்கள் பிடுங்கிகொள்கிறார்கள். ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையில் சோழர் மன்னர் தன்னுடைய மகனை அந்த சிலையுடன் கண்தெரியாத தீவுக்கு அனுப்பிவிடுகிறார் ஆண்ட்ரியா ரீமா சென் கார்த்தி மற்றும் குளுவினர் தொலைந்து போன சிலையையும் தன் அப்பாவை தேடுவதற்காக வியட்நாம் தீவை நோக்கி போகிறது. அது அவ்வளவு எளிதானதில்லை. ஏழு கடுமையான பாதுகாப்புகளை தாண்ட வேண்டியுள்ளது. அவர்கள் ஒவ்வொரு தடையாக தாண்டி கடைசியாக சிலை இருக்கும் இடத்துக்கு போகிறார்கள். அங்கு சோழர்கள் இன்னும் உயிரோடு வாழ்கிறார்கள்.சோழர்களின் கூட்டத் தலைவன் பார்த்திபனால் சிறை பிடிக்கப்படுகிறார்கள். திடிரென ரீமா சென் பாண்டிய மன்னர் தலைமுறையில் இருந்து வருபவர் என்றும் சோழர்களை பழி வாங்கி அந்த சிலையை கவர்ந்து போகபோறார் என்றும் தெரிகிறது. இதில் நடித்த துணை நடிகர்களும் சும்ம கலக்கியருக்காங்க. உடல் முழுவதும் கருப்பு பெயிண்ட் அடித்து  காட்டுவாசிகளாக ஆகி இருக்கிறார்கள். கார்த்தி ரீமாசென் இருவருக்குமே விருது கொடுக்கலாம். சும்ம நடிப்புல சூப்பர்

          பார்த்திபன் ராஜா வேஷத்திற்கு கனகச்சிதம். வேறு யாரும் இப்படி பொருந்துவாங்களாங்கிறது சந்தேகந்தான் செல்வராகவன் படத்தை அருமையா எடுத்திருக்கார் சில காட்சிகள் ஹாலிவுட் லெவலு்ககு எடுக்க்பட்டுள்ளது சில காட்சிகள் கொஞ்சமும் புரியவில்லை அவர்கள் பேசும் தமிழைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை ஹெலிகாப்டரில் போக முடிந்த இடத்திற்கு ஏழு பாதுகாப்பு தாண்டி ஏன் போகனும் தேவை யில்லாத வெட்டி பயணம்மும் வரும் மாயாஜாலக் காட்சிகளும் நம்ப முடியவில்லை

          ஒளிப்பதிவாளர்,இசையமப்பாளர் ஆகியோரின் உழைப்பு வீண் போகலை. கேமிராவும் இசையும் அருமை. ஆயிரம் நல்ல படங்கிளில் முதலிடத்தை பெறும் படமிது. உலகதரத்திலான படமிது பார்கலாம்