1. மற்றவர்களுக்கு பயன் படும்படியான கருத்தை நமது பதிவில் சொல்லனும் அல்லது மற்றவர்கள் ரசிக்கும்படியாக எழுதனும். குறுக்கு வழியில் பிறர் பயனடைய நாம் வழி காட்டக்கூடாது. (இது எனது அனுபவம். )
2. பிற நல்ல பதிவுகளை பாராட்டி பின்னுர்ட்டம் போடனும் . மட்டமான பதிவுகளை திட்டக்கூடாது பக்குவமா எடுத்து சொல்லி கமண்ட் போடனும்
3. நிறைய பிளாக்குகளை பாலோ பண்ணனும் முக்கியமா நல்ல பிளாக்குகளை பாலோ பண்ணனும்.(பின் தொடரனும்)
4. தினசரி புது பதிவு போடனும் முடியாட்டி வாரம் ஒரு பதிவாவது போடனும். முக்கியமா யோசிச்சு உருப்படியா போடனும்.
5. நாம ஒன்னு நினைச்சு நல்ல பதிவுனு போடுவோம் ஆனா அது மக்களாலே நிராகரிக்கப்பட்டாலும் கவலை படக்கூடாது மறுபடியும் புதுசா யோசிச்சு புதுசா பதிவு போடனும்.
6. நல்ல பதிவுதளங்களை நமது தளத்துக்கு வருபவருக்கு அடையாளம் காட்டலாம்.
7. நமது பதிவுகளை எல்லா வலைதிரட்டிகளிலும் வெளியிடலாம்
8. நமது பிளாக் எல்லா சர்ச்என்சினும் தேடனும் என்றால் Dashboard - Layout - Edit HTML போகனும். அப்புறம் அங்கே இருக்கும் Expand Widget Templates என்பதில் டிக் பண்ணனும். அதில் rel='nofollow' என்று எங்கே இருக்கு என்று தேடனும் அப்புறம் அதை 'follow' என்று மாத்தனும். பிறகு சேவ் செய்யனும். இப்போ எல்லா சர்ச்இஞ்சினிலும் நமது பிளாக் தேடினால் தெரியும்.
9. சினிமாவை பத்தி எழுதி வெளியிட்டால் எப்படியும் கொஞ்சபேராவது நமது தளத்தை பார்ப்பார்கள். அரசியல் வேண்டாம் அது பல பிரட்சனைகளையும் கொண்டுவந்து விடும்.
10. எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி யாராலேயும் எழுத முடியாது. ஒருத்தருக்கு பிடிச்ச விஷயம் இன்னொருவருக்கு பிடிக்காது. அதனால ஒருத்தர் மட்டமா பின்னு)ட்டம் போட்டதுக்காக கவலைப்படக்கூடாது. நியாயமான தவறை யாராவது சுட்டி காட்டினால் உடனே திருத்தனும்.
11.எல்லாத்துக்கும் மேலே தலைப்பு வித்தியாசமா வைக்கனும் பார்கறவங்களை சுண்டியிழுக்கனும்.
இன்னும் நிறைய விவரம் வேனும்னு நினைக்கிறவங்க இங்க கிளிக் செய்யவும். பார்கவும்