21-2-2010 சென்னையிலிருந்து கோவில்பட்டி போக ரயிலில் ராமசாமி பெயருக்கு 1 தக்கால் டிக்கட் புக் பண்ணினேன்.. ஆனால் எனது அதிர்ஷ்டம் 2 டிக்கட் ஒரே பெயரில் வந்தது கீழே படத்தை பார்கவும் படத்தின் மேல் பாகத்தில் ஒரு டிக்கட்டும் கீழ் பாகத்தில் ஒரு டிக்கட்டும் விவரமாக உள்ளதை கவனிக்கவும் பெயர் வயது பாலினம் தேதி போகும் ஊர் கிளம்பும் ஊர் எல்லாம. ஒரே மாதிரியாக உள்ளதை பார்கலாம் pnr no transaction id ஆகியன மட்டும் வேறவேறயாக இருப்பதையும் பார்கலாம். ஆனால் சூழ்நிலை சரியில்லாததால் இரண்டு டிக்கட்டுமே கேன்சல் செய்தோம். 66+66 என 132 ரூபாய்தான் திரும்ப கிடைத்தது.
பின் குறிப்பு;- அதிர்ஷ்டம் எனக்கு இல்லை. ரயில்வேக்குதான் அதிர்ஷ்டம் ஏனென்றால் இரண்டு டிக்கட்டுக்கும் சேர்த்து 718ரூ எனது கணக்கில் பணம் குறைந்து விட்டது. வந்தது 132ரூபாய்தான். இது எனது தவறா அல்லது எனது கம்யூட்டர் தவறா அல்லது நான் டிக்கட் எடுத்த சாப்ட்வேர் தவறா அல்லது வேறு ஏதாவதா என்று எனக்கு தெரியவில்லை.
இதுக்கு முன்பு ஒருமுறை நான் தக்கால் டிக்கட் எடுத்தபோது 824 வெயிட்டிங்லிஸ்ட் வந்தது. ஆனால் pnr status செக் பண்ணிய போது டிக்கட் கன்பார்ம் காட்டியது. அப்புறம் அக்குறை சரி செய்யப்பட்டது. மதியத்துக்கு அப்புறம் சரியான டிக்கட் பிரிண்ட் ஆனது.