Thursday, March 11, 2010

ஆன்லைன் டிரெயின் டிக்கட் ரிசர்வ் செய்யும் போது நாம் சரியான தேதி குறிப்பிட்டும் தவறான தேதியில் டிக்கட் வர வாய்புள்ளதா?

ஆன்லைன் டிரெயின் டிக்கட் ரிசர்வ் செய்யும் போது நாம் சரியான தேதி குறிப்பிட்டும்  நாம் கவனமாக இல்லாவிட்டால் தவறான தேதியிலும் டிக்கட் வர மிகவும் அரிதாக வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான விளக்கம் இங்கு.
நான்  மே 22ந்தேதிக்கு சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கு போக டிக்கட்  ரிசர்வ் பண்ண முடிவு பண்ணினேன் அதனால் நேற்று எனது கம்பியூட்டரில் ஆன்லைன் டிக்கட் புக் பண்ண உட்கார்ந்தேன்.  மே22ந் தேதியை சரியாக குறிப்பி்டடு டிக்கட் இருக்கிறதா என்று சர்ச் பண்ணினேன். மேலே படத்தை பாருங்கள் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்ஸில் மட்டும் டிக்கட் இருக்கிறது என்று காணபிக்கிறது. சரி என்று சந்தோஷமாக நாம் டிக்கட்புக் பண்ணிவிடக்கூடாது. ஏன் என்றால் அதில் தேதியை உற்று பாருங்கள் அந்த டிரயினுக்கு மட்டும் 20ந்தேதி என்று இருப்பதை. எப்பவுமே டிக்கட் சர்ச் செய்யும் போது நாம் எந்த தேதியை குறிப்பிட்டோமோ அந்த தேதியை மட்டும்தான் காண்பிப்பது வழக்கம் நேற்று மாறாக 20ந்தேதியை காண்பித்தது மிகவும் அரிதான செயல்தான். நாம் கவனமாக இல்லாமல் book யை கிளிக் செய்தால் அது 20ந்தேதிக்குதான் டிக்கட் புக் பண்னும் படியாக அடுத்த ஸடெப் போகிறது. சரி இந்த கிளியர்டிரிப் புரொக்கிராமில்தான் இப்படி போகிறது என்று வேறு கம்பெனி புரொகிராமில் பார்தால் அங்கும் இப்படிதான் காண்பிக்கிறது அந்த படம் கீழே.
மேலே படத்தை பாருங்கள் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சனிகிழமை போகிறது என்று போட்டு இருக்கிறது (சனிகிழமை என்பது 22ந்தேதியாகும்). ஆனால் டிக்கட் அவய்லபிளில்  20ந்தேதிதான் காண்பிக்கிறது. 20ந்தேதி என்பது வியாழக்கிழமையாகும் இப்படி முரண்பாடான வகையில் காண்பிக்கிறது. சரி irctc website லாவது பார்ப்போம் என்று நினைத்து அங்கு பார்த்தால் அங்கும் இப்படி தான் காண்பிக்கிறது. சரி என்று 20ந்தேதிககு டிக்கட் எப்படி அவயிலபில் இருக்கிறது என்று சர்ச் பண்ணினால் அந்த தேதியிலும் முரண்பாடாக காண்பிக்கிறது இப்படி பல தேதிகளில் நான் சர்ச் பண்ணிய படங்களை கீழே தந்துள்ளேன் . படத்தை பார்க்கவும் படத்தில் நான் சர்ச் பண்ணிண தேதி படத்தின் மேலேயே போடப்பட்டுள்ளது முரண்பாடான சர்ச் ரிசல்டடும் அப்படத்திலேயே உள்ளது
அடுத்த படம் 29ந்தேதிக்கு சர்ச்செய்யப்பட்டது
குறிப்பு:- irctcயில் இன்று சரியாக காண்பித்தது. ஆனால் cleartripல் இன்னும் அப்படிதான் காண்பிக்கிறது. நீங்கள் சரிபார்க்கவும் அதற்கான வெப்சைட் கீழே
http://www.cleartrip.com/trains/results?from_station=ms&to_station=NCJ&class=SL&date=22-5-2010&adults=1&children=0&male_seniors=0&female_seniors=0