Monday, March 15, 2010

வினிகர் என்பது என்ன? அதன் பயன் என்ன?

வினிகர் என்பது எத்தனால் என்ற நீர்மத்தை நொதிக்க வைப்பதினால் உருவாக்கப்படும் நீர்மப் பொருளாகும். . பழச்சாறு அல்லது காய்கறிச்சாறு ஆகையவற்றை நொதிக்கவிடுவதன் மூலமும் இது கிடைக்கும். ஊறுகாய் கெடாமல் பாதுகாக்கப் இது பயன்படும்.  இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் வினிகரில் சிறிய அளவில் டார்ட்டாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலியன இருக்கின்றன.

ஒரு லிட்டர் தண்ணிரில் ஒரு டம்ளர் வினிகரை கலந்து வீட்டில் இருக்கும் ஜன்னல் கேட் கம்பிகளை துடைத்தால் அவைகள் பளபளப்பாக இருக்கும்.

தண்ணீருடன் வினிகரை கலந்து பாத்திரங்களை விளக்கினால் பாத்திர நாற்றம் போகும். பாத்திரமும் பளபள்ப்பாகும்.

கேஸ்டவ் சுத்தம் செய்ய தண்ணீருடன் வினிகர் கொஞ்சம் கலந்து பயன்படுத்தலாம்.

வீட்டின் தரைகளை துடைக்கவும் தண்ணீருடன் வினிகரை கலந்து பயன்படுத்தலாம்.